தமிழின் பிறப்பை வரையறுத்துக் கூற இயலாது என்கிற பொருளில் ‘என்று பிறந்தவள் என்றறியாத் தமிழ்’ என்று மகாகவி பாரதியார், ‘திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் தமிழின் தொன்மையைப் போற்றுகின்றனர். ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை. இத்தகைய சிறப்புக்குரிய தமிழை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் துவங்கப்பட்ட 2001 ஆம் ஆண்டிலிருந்தே அடித்தளப்படிப்பாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இக்கல்லூரிப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி 2008 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக்கல்வியில் தமிழ் அல்லாத பிறமொழிப் பயின்ற மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழையும், பள்ளிக்கல்வியில் தொடர்ச்சியாய்த் தமிழைக் கற்காத மாணவர்களுக்குச் சிறப்புத் தமிழையும், கற்பித்து வருகின்றது. பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை இதுவரை மூன்று பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தியுள்ளது.
1. இலக்கியங்கள் காட்டும் தொழில்கள் - 2011 ஆம் ஆண்டு
2. இலக்கியங்கள் காட்டும் சமுதாய விழிப்புணர்வு - 2014 ஆம் ஆண்டு
3. செவ்விலக்கியங்களில் பன்முகப் பார்வை – 2019 ஆம் ஆண்டு
(தொல்லியல்-வரலாறு-பண்பாடு-மானுடவியல்-மொழியியல்)
இக்கருத்தரங்கங்களுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வருகைத்தந்து கருத்தரங்கை சிறப்பித்தனர்.
பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பாடதிட்டத்தின் அடைப்படையில் மட்டும் தமிழைக் கற்பிக்காமல் அவற்றைக் கடந்தும் தமிழின் தொன்மையை, தமிழின் சிறப்பை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகப் ‘பாரதிதாசன் தமிழ் இலக்கியப் பேரவை’ என்கிற அமைப்பை நிறுவி மாணவர்களுக்குத் தமிழர் கலை இலக்கியப் பண்பாடு குறித்த புரிதல்களை இக்கல்லூரியின் தமிழ்த்துறை ஏற்படுத்துகிறது.
மேலும் இத்தமிழ்ப் பேரவை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளைத் தமிழ்ப்பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த தலைப்புகளின் கீழ் நடத்தி மாணவர்களிடையே தமிழ் கலை இலக்கிய ஆர்வத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழின் முக்கிய ஆளுமைகளைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்களின் சொற்பொழிவு வாயிலாக மாணவர்களுக்குத் தமிழிலக்கியச் சுவையையும், தமிழரின் வரலாற்றையும் அறிந்துகொள்ள வழிவகைச் செய்கிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ்மன்றத்திற்கென மாணவர் தலைவர், மாணவர் துணைத்தலைவர், உறுப்பினர்களை உருவாக்கி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து கலை இலக்கியத்துறையில் ஆளுமைமிக்கவர்களாக உருவாக்கும் உயர் பணியையும் தமிழ்த்துறைச் செய்து வருகிறது. இவைமற்றுமின்றி உலகத் தாய்மொழித் தினம், திருவள்ளுவர் தினம், கல்வி வளர்ச்சி நாள் முதலிய நாட்களில் தமிழ்த்துறை விழாக்களை நடத்தி அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றது.
முனைவர் ஏ. இராஜசேகர்
தமிழ்த்துறைத் தலைவர்
M.A., M.Phil., (Ph.D), NET
M.A., M.Phil., (Ph.D)
M.A, M.A (Ling.), Ph.D, NET
M.A., M.Phil., B.Ed., NET, SET, (Ph.D)
MA (Tamil)., M.A (Journalism)., M.A.(Linguistics)., M.Phil., Ph.D. PD.F
The Department takes several intiatives every year by organizing various programs for the overall development of students to provide Communication,Technical and Employablity skills to enhance the personality of the students and to face the competitive world.
1) ரபிலா ஹெரின் III பி.ஏ (ஆங்கில இலக்கியம்) அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம்-நூற்றாண்டு கடந்த வைர விழா சார்பில் 07.09.2018 அன்று நடைபெற்ற மாநில அளவிலான கட்டுரைப்போட்டியில் முதல் பரிசினைப்பெற்றார். முதல் பரிசுக்கான ரூ 10,000-த்தை மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களிடம் பெற்றார்.
2) பரத்குமார் III பி.எஸ்.சி (கணிணி அறிவியல்) அவர்கள் தமிழ்நாடு அரசு - தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 14.09.2018 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப்போட்டியில் முதல் பரிசு ரூ 10,000 பெற்றார்.
3) பெட்சி ஜாய்ஸ் II பி.எஸ்.ஸி (கணிதம்), ஜானட் லினீட்டா II பி.எஸ்.ஸி(உளவியல்), அற்புதா, II பி.எஸ்.ஸி (உளவியல்), சக்தி பிரியா I பி.எஸ்.ஸி (உளவியல்) ஆகியோர் கொண்ட குழு ஸ்ரீ கன்யகா பரமேஷ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 07.09.2018 அன்று நடத்திய ‘’தமிழ்பேசு தங்க காசு ’’போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்றனர்.
4) பி.ராகுல் II எம்.ஏ (ஆங்கில இலக்கியம்) அவர்கள் எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி 10.09.2018 அன்று நடத்திய ‘’ழ கரத்தைச் சேர்ப்போம் -2018 ‘’நிகழ்ச்சியில் நடைபெற்ற தனி நடிப்புப் போட்டியில் (நீங்க நல்லவரா கெட்டவரா) முதல் பரிசைப் பெற்றார்.
5) ரபிலா ஹெரின் III பி.ஏ (ஆங்கில இலக்கியம்) அவர்கள் எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி 10.09.2018 அன்று நடத்திய ‘’ழ கரத்தைச் சேர்ப்போம் -2018 ‘’நிகழ்ச்சியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.
6) ஸ்ரெயாஸ் II எம்.ஏ (ஆங்கில இலக்கியம்) அவர்கள் எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி 10.09.2018 அன்று நடத்திய ‘’ழ கரத்தைச் சேர்ப்போம் -2018 ‘’நிகழ்ச்சியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்.
7) ரூபன் பிரகாஷ் I பி.பி.ஏ, அவர்கள் தழல் இலக்கிய அமைப்பு 8.12.2018 அன்று சென்னையில் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசினைப் பெற்றார்.
8) பாரதி III பிஎஸ்.சி (கணிதம்), அவர்கள் தழல் இலக்கிய அமைப்பு 8.12.2018 அன்று சென்னையில் நடத்திய பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்றார்.
9) பரத்குமார் III பி.எஸ்.சி (கணிப்பொறியியல்) அவர்கள் தர்மமூர்த்தி ராவ் பகதூர் இந்து கல்லூரியில் 11.09.2018 அன்று நடைபெற்ற கவிதைப்போட்டியில் முதல் பரிசினைப் பெற்றார்.
10) பாரதி III பிஎஸ்.சி (கணிதம்), அவர்கள் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி 2.2.2019 அன்று நடத்திய பேச்சுப் போட்டியில் மூதல் பரிசினைப் பெற்றார்.
தமிழ்த்துறை
பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மின்னஞ்சல் முகவரி : tamildept@patriciancollege.ac.in